உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதை அனுமதிக்க முடியாது என்று பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் உள்ளூராட்சி சட்டவிதிகளின் பிரகாரம் சபையின் உறுப்பினர்களில் 25 வீதம் உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
அதன் பிரகாரம் 340 உள்ளூராட்சி சபைகளில் 2027 பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
அதேநேரம் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 19,500 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இது வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 32% வீதமாகும்.
அந்த வகையில் 2027 பெண் உறுப்பினர்கள் என்பதே மிகக்குறைவான எண்ணிக்கையாகும். அவ்வாறிருக்க அதனையும் குறைக்க முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சி பெண்களுக்கு அரசியலில் போதிய வாய்ப்புகளை வழங்க முன்வந்தாலும், அக்கட்சியில் இருக்கும் சிலர் பெண்களுக்கு இடமளிப்பதில் எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்று பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.