அமைச்சர் சுவாமிநாதனுடன் த.தே.கூட்டமைப்பு எம்.பி பேச்சுவார்த்தை

Report Print Kavitha in அரசியல்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களில் இந்துமத விவகார அலுவல்கள், நீர்ப்பாசனக்குளங்கள், வீடமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம், பிரதம கணக்காளர் எஸ்.கனகரத்தினம், செயலாளர் ஆ.அமிர்தானந்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.