பதவிகளை இழக்கும் ஐ.தே.கட்சியின் இரண்டு அமைச்சர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்
622Shares

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரின் அமைச்சுப் பொறுப்புகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தின் நாளைய அமைச்சரவை மாற்றத்தின் போது இவர்களின் அமைச்சுப் பதவிகளுக்கான பொறுப்பு நீக்கப்படவுள்ளது.

அதற்குப் பதிலாக குறித்த அமைச்சர்கள் இருவரும் பொறுப்புகள் அற்ற சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அவர்கள் இருவரும் வகித்த அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகள் இருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.