எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் இரா.சம்பந்தனுடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம்.
இதில் சம்பந்தனுடன் எந்தவித பிரச்சினையும் இல்லை. அத்துடன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்லிங்கத்தின் கீழ் உறுப்பினர்களாகத் தாம் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.