அமைச்சரவை மாற்றத்தில் ஜனாதிபதியின் நோக்கம்

Report Print Aasim in அரசியல்

அமைச்சரவை மாற்றத்தின் போது ஊடகம் மற்றும் நிதி அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த அமைச்சுப் பதவிகள் தற்போதைக்கு ஐக்கிய தேசியக் கட்சி வசம் உள்ள நிலையில் அதனை சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இருவரின் கையில் ஒப்படைப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக துறைமுகங்கள் அமைச்சை விட்டுக் கொடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் எதுவித பதிலையும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதேநேரம் அமைச்சரவையில் சிறுபான்மை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.