மகிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கினால் ஆட்சியமைத்து காட்டுவோம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டு எதிர்க்கட்சி சந்தர்ப்பத்தை கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைக்கும் தேவை ஜனாதிபதிக்கு இருந்தால், அதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியை நீக்கி விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க போவதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கூறினார். எனினும் தற்போது அந்த நிலைப்பாடு மாறியுள்ளது.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க அழைத்தால், அரசாங்கத்தை அமைக்கும் விதத்தையும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் விதத்தையும் காண்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.