மகிந்தவின் பதவி குறித்து சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்
177Shares

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருடங்களுக்கு மக்களின் ஆணை இருக்கின்றது. சுமார் 500 நாட்கள் மீதமுள்ளன.

எவர் ஆட்சியமைப்பதாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஐக்கிய தேசியக்கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ எதுவாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.