கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த பிரதேசத்தில் உள்ள கழிவு நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த பிரதேசத்தில் இருந்து மாதம்பிட்டிய கழிவகற்றும் தொகுதி அமைந்துள்ள பகுதி வரையான 5.5 கி.மீ. நீளத்துக்கு 900 மி.மீ பரப்பினை கொண்ட பிரதான கழிவு நீர் குழாய்யொன்றை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த மார்க்கத்தில் அமைந்துள்ள பேரே வாவிக்கு குறுக்காக இந்தக் குழாயினை அமைப்பதற்காக அவகாசம் காணப்படுவதால் தற்போது அவ்விடத்தில் காணப்படுகின்ற கழிவு நீர் குழாய் மார்க்கங்கள் 02 இற்காக பொது குழாய் மார்க்கம் ஒன்றை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அப்பகுதிக்கான பொது குழாய் வசதியினை பொருத்துவதற்கான டெப் அத்திவாரத்தினை ஈடும் ஒப்பந்தத்தினை 48 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s ELS Construction (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.