தாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலருமா?

Report Print Rakesh in அரசியல்

தீர்வு முயற்சிகள் எனது ஆட்சிக்காலத்தில் நடந்தபோது சம்பந்தன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சியின் போது இந்தியாவின் பேச்சைக் கேட்டு நடந்த சம்பந்தன், இன்று தாமரை மொட்டில்தான் தனித் தமிழீழம் மலரும் என்று சொல்வது நகைப்பாக இருக்கிறது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் தவறான பிரசாரங்களை மஹிந்த அணி முன்னெடுக்குமாயின் தாமரை மொட்டிலிருந்தே தனித் தமிழீழம் மலரும் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "எனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தீர்வுப் பேச்சுகளுக்கு ஒத்துழைக்காமல் சம்பந்தன் இப்போது பிதற்றுகின்றார்'' என்று தெரிவித்துள்ளார்.

"அப்போது டயஸ்போராவின் பேச்சையும் இந்தியாவின் பேச்சையும் கேட்டு சம்பந்தன் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. ஒரு பேச்சு நடக்கும்போது பல கருத்துகள் வரலாம். பல சிக்கல்கள் வரலாம். ஆனால், ஒத்துழைக்காமல் இருப்பது நியாயமானதல்ல. சம்பந்தன் அதனைச் செய்தார். இப்போது தாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலரும் என்று அவர் சொல்லுவது வெறும் பிதற்றலே'' என்றும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...