அமைச்சரவை மாற்றத்தின் போது ரணிலின் எதிர்த்தரப்புக்கும் அமைச்சுப் பதவிகள்?

Report Print Rakesh in அரசியல்

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னை எதிர்த்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கத் தீர்மானித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதியமைச்சர்களாக இருக்கும் இரான் விக்கிரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது.

இவர்களில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பின்னடைவை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விலகிக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக எதிர்ப்புக் கொடி தூக்கியிருந்தனர்.

எனினும் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இவர்களுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுப் பதவிகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.