தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

Report Print Rakesh in அரசியல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பான விடயங்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக ஆராயப்படவுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், கட்சிக்கு எதிராக இயங்கியமை உள்ளிட்ட விடயங்களும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது.