ரணிலின் ஆலோசனையை கடுமையாக நிராகரித்த மைத்திரி! அமைச்சரவையில் சலசலப்பு

Report Print Aasim in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த ஆலோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக நிராகரித்துள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை காரணமாகவே அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

அதே ​நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள சலசலப்பை அடக்கும் வகையில் அவர்களில் சிலருக்குப் பிரதியமைச்சர் பதவிகள் வழங்குமாறும் பிரதமரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.

பெரும்பாலும் இம்மாத கடைசித் தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அறியக் கிடைத்துள்ளது.