ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி!

Report Print Kamel Kamel in அரசியல்

ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கத் திட்டம்ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

இரண்டு கட்சிகளினாலும் இணைந்து உள்ளுரட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கக்கூடிய இடங்களில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

நாடாளுமன்ற வரலாற்றில் இவ்வாறான ஆட்சிகள் நிறுவப்பட்டுள்ள காரணத்தினால், உள்ளுராட்சி மன்றங்களில் இவ்வாறு ஆட்சி அமைப்பது வழயைமானதேயாகும்.

தற்பொழுது நாட்டில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளதனால், உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினையிருக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத இடங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சியை நிறுவ முடியும் என டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.