பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ராஜினாமா?

Report Print Kamel Kamel in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட, பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவியை ராஜினமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதியுடன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமாரி விஜேவர்தனவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே அமாரி விஜேவர்தன பிரிட்டனுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் அமாரி விஜேவர்தனவின் இரண்டாண்டு கால சேவை பூர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் எதிர்வரும் 30ம் திகதியுடன் பதவியை ராஜினாமா செய்வதாக அமாரி குறிப்பிட்டு கடிதமொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அமாரி விஜேவர்தனவின் ராஜினாமா பற்றி வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதனையும் இதுவரையில் அறிவிக்கவில்லை.