றிசாட், கபீர், மலிக் ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசாட் பதியூதீன் வகித்து வரும் வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சில நிறுவனங்கள் வேறு துறைக்கு மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் போது இதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கபீர் ஹாசீம் வகித்து வரும் அரச நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் மலிக் சமரவிக்ரமவின் அபிவிருத்தி வழிமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

சரத் பொன்சேகா தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அவர் வகித்து வரும் பிரதேச அபிவிருத்தி அமைச்சில் பதில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தற்போது கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.