தேசிய அரசாங்கம் வெளிநாடுகளின் கைப்பாவை: குணதாச அமரசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கம் வெளிநாடுகளின் கைப்பாவை என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது தேசிய அரசாங்கத்தின் அடுத்த இலக்காக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராஜகிரியவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே குணதாச அமரசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் பலரின் கவனம் திசைத்திருப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்க போவதாக கூறியது. சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்தால், உதவுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூறியது.

அது மாத்திரமல்ல சிலர் பிரதமர் பதவியை ஏற்கவும் தயாராக இருந்தனர். இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பழைய நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளது” என குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.