பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைதான் அரசின் தோல்விக்கு காரணம்

Report Print Steephen Steephen in அரசியல்

சைட்டம் பிரச்சினை உட்பட தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக எனக்கு இன்னும் தெரியவில்லை எனவும் இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் ஜனாதிபதியே எடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் தலைவருடன் எப்போதும் இருந்துள்ளேன்.

நாளை வேறு ஒரு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவை வழங்குவேன். என்றும் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கப் போவதில்லை எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.