வெளிநாட்டவரின் ஆடம்பர வீட்டை சுற்றி வளைத்த தமிழ் பெண் அமைச்சரின் சகாக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் எவனியூ பகுதியில் உள்ள ஆடம்பர வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்த செல்வந்த வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினரை பலவந்தமாக வெளியேற்றி விட்டு, வீட்டை ரவுடிகள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட வர்த்தகர் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ரவுடிகள், தமிழ் பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் வசித்து வரும் ஒருவருக்கு சொந்தமான அந்த வீட்டில் வர்த்தகரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 28 வருடங்களாக வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

வர்த்தகரின் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறாத காரணத்தினால், ரவுடிகள் சென்று வீட்டில் இருந்தவர்களை தாக்கி, வீட்டை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.