ரணிலுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையை சேர்ந்த கால்லகே பூன்யவர்தன பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு கடந்த 17ஆம் திகதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் அரசுரிமை கொண்ட தனக்கு சொந்தமான பணம் மற்றும் சொத்துக்களை பிரதமர் உட்பட குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள அவர், இந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குமாறு அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.