எதிராளியின் முகத்தில் கொதிநீரை ஊற்றிய பெண் பொலிஸ் அதிகாரி

Report Print Aasim in அரசியல்

வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் எதிராளியின் முகத்தில் கொதிநீரை ஊற்றி காயப்படுத்திய பெண் பொலிஸ் அதிகாரியொருவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டரான பத்மா மங்கலிகா என்பவர் தன்னுடன் வாய்த்தர்க்கம் புரிந்த குமுதுனி என்ற பெண் மீது கொதி நீரைக் கொட்டியுள்ளார்.

இதன் காரணமாக குமுதுனி என்ற பெண்ணின் முகம் வெந்து காயப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அவர் பொலிசில் முறைப்பாடு செய்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபரான முன்னாள் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.