மஹிந்தவின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்
370Shares

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்க மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டு, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதனைடுத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதனையே அடுத்த இலக்காக அந்தக் கட்சி கொண்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தி எதிர்ப்பினை ஏற்று, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது மஹிந்த தலைமையிலான கட்சியின் கோரிக்கையாகும்.

பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தும் நோக்கில் பல பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாவது பேரணி நுகேகொடயில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையில் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்கமகே, டலஸ் அலகபெரும, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்படும் அனைத்து மக்கள் பேரணிகளிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.