விஜேதாச ராஜபக்ஷவுடன் பிரதமர் திடீர் சந்திப்பு

Report Print Aasim in அரசியல்
155Shares

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீர் என்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்‌ஷவிற்கு எதிராக அரசாங்கத்தினுள் வலுப்பெற்ற எதிர்ப்பு காரணமாக அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் கடந்த பல மாதங்களாக அவரை எந்தவொரு அரசியல்வாதியும் சந்திக்கவே விரும்பாத நிலையில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீரென்று விஜேதாச ராஜபக்‌ஷவை சந்தித்து உரையாடியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மற்றும் விஜேதாசவுக்கு இடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக நோக்கப்படுகின்றது.

விஜேதாசவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியொன்றைக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடவே பிரதமர் ரணில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.