ரவிக்கு அமைச்சுப் பதவி இல்லை?

Report Print Aasim in அரசியல்
84Shares

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது என்றே தெரியவந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் வழங்கிய பெயர்ப்பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியாக ரவி கருணாநாயக்க சித்தரிக்கப்படும் நிலையில் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் பிரதமர் வழங்கிய பெயர்ப்பட்டியலில் ரவியின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.

எனினும் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படமாட்டாது என்ற தகவல் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் கட்சித் தலைமையிடம் மாத்திரமன்றி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கும் தங்கள் எதிர்ப்பை வௌிக்காட்டத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.