பொதுத்தேர்தலுக்கு காலம் உள்ளது!

Report Print Aasim in அரசியல்
33Shares

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இன்னும் காலம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்‌ஷ, பொதுத் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்த வலியுறுத்தி வருவது குறித்தே இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் எஞ்சியுள்ளது. அதன் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய காலம் குறித்து பொருத்தமான சந்தர்ப்பத்தில் தீர்மானிப்பார்.

அதே போன்று தற்போதைக்கு அமைச்சரவை மாற்றம் மிக முக்கியமானது. அதன் மூலம் அரசாங்கத்திற்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என லக்‌ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.