அமைச்சரவை மாற்றத்தின்போது பொருத்தமான அமைச்சுப் பதவி கிடைக்காத பட்சத்தில் அரசாங்கத்தை விட்டு விலக பாலித ரங்கே பண்டார உத்தேசித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவரும், ராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தனக்குப் பொருத்தமான அமைச்சுப் பதவி கிடைக்காது போனால் அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
அவ்வாறு விலகுவதாக இருந்தால் நாளைய தினம் அதுபற்றிய விசேட அறிவிப்பொன்றை வௌியிடவும் அவர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனமடுவைத் தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜினாமாச் செய்ய முயன்றபோதும் கட்சித் தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.