அர்ஜுன் அலோசியஸ் சிறைச்சாலை மருத்துவமனையில்

Report Print Aasim in அரசியல்
19Shares

பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு காரணமாக கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பளிசேன ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அர்ஜூன் அலோசியஸுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கசுன் பளிசேன முதுகுவலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய தினம் மாலை கசுன் பளிசேன மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.