பொன்சேகாவிடம் பொலிஸ் திணைக்களம் வழங்கப்பட்டால் ராஜினாமா! ​பொலிஸ் மா அதிபர்

Report Print Aasim in அரசியல்
199Shares

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் தான் உடனடியாக ராஜினாமாச் செய்யப் ​போவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவுக்கான விஜயம் ஒன்றை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பவுள்ள சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவியிருந்தது.

அவ்வாறு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி பொன்சேகாவிடம் வழங்கப்பட்டால் தான் 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸ் மா அதிபர் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாக பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

எனினும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக சரத் பொன்சேகா போன்று நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவதே பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.