சட்டம், ஒழுங்கை கையில் வைத்திருக்க ஜனாதிபதி முடிவு?

Report Print Aasim in அரசியல்
232Shares

சட்டம், ஒழுங்கு அமைச்சை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம், ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தேசித்திருந்தனர்.

எனினும் ஒருபுறத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பிக்குகள் குறித்த அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்கினால் வீதியில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.

அதே நேரம் சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்களும் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த அமைச்சுப் பதவியை தன் வசம் வைத்துக் கொண்டு பிரதியமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமித்துக் கொள்வது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்திவருவதாக தெரிய வந்துள்ளது.