கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று காலை டோஹா கட்டார் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமைச்சர் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கட்டார் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதேவேளை, மேலும் சில அமைச்சர்கள் இன்று மாலை வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுசில் பிரேமஜயந்த, கலாநிதி சரத் அமுனுகம ஆகிய அமைச்சர்களும், ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவும் இன்று வெளிநாடு செல்ல உள்ளனர்.
இதனிடையே அமைச்சரவை மாற்றமும் இன்று நடைபெறவுள்ளது.