நல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய உத்தேச அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஒருசில தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளன.
அதற்கேற்ப தற்போதைக்கு கமத் தொழில் அமைச்சராக பணியாற்றும் துமிந்த திசாநாயக்கவிடமிருந்து அந்தப் பொறுப்பு அகற்றப்பட்டு அவருக்கு அனர்த்த சேவைகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
கமத்தொழில் அமைச்சு மஹிந்த அமரவீர அல்லது அனுர யாப்பாவுக்கு வழங்கப்படவுள்ளது.
காமினி ஜயவிக்கிரம பெரேராவின் அமைச்சுப் பொறுப்பு அகற்றப்பட்டு அவர் விசேட செயற்திட்ட அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
அல்லது அவரிடமிருந்து வனசீவராசிகள் அமைச்சு அகற்றப்பட்டு நிலைபேறான அபிவிருத்தி அமைச்சராக அவர் தொடரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான எஸ். பி. திசாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, தயாசிறி ஜயசேகர, ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதே நேரம் சம்பிக ரணவக, வஜிர அபேவர்த்தன, நவீன் திசாநாயக்க, அகில விராஜ் ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் மாற்றப்பட மாட்டாது என்றும் தெரிய வருகின்றது.