எட்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம்?

Report Print Aasim in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது எட்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்று காலை 11 மணிக்குள் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளைப் பொறுப்பேற்க உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நண்பகல் 12 மணிக்குப் பின்னரே அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

அத்துடன் தற்போதைய அமைச்சரவையில் எட்டு அமைச்சுக்களில் மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் முக்கிய அமைச்சுகள் சில உள்ளடங்குவதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.