இரட்டை ஆட்டம் ஆடும் சுசில் பிரேமஜயந்த

Report Print Steephen Steephen in அரசியல்
242Shares

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தமது கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை ஆட்சியில் அமர்த்த முயற்சித்ததுடன் ஜனாதிபதிக்கும் அழுததங்கள் கொடுத்தனர்.

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த அமைச்சர்கள் இருந்து வந்ததுடன் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே இதில் முன்னின்று செயற்பட்டார்.

மகிந்த தரப்பினரின் ஆதரவை பெற்றாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.

மேலும் சுதந்திரக்கட்சியின் ஆட்சியை ஏற்படுத்த முடியாது போனால், அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

சுசில் பிரேமஜயந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே ராஜபக்சவினருக்கான ஆதரவு கொள்கையை கொண்டிருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்தார்.

அமைச்சர் பதவிகளை கைவிட்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்று பகிரங்கமாக கூறும் சுசில் பிரேமஜயந்த, இரகசியமான முறையில் தனது அமைச்சு பதவியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்துள்ள சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதியுடன் பேசி தனக்கு மற்றுமொரு அமைச்சை பெற்று தருமாறு கேட்டுள்ளார்.

விஞ்ஞானம், தொழிழ்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சராக கடமையாற்றி வரும் சுசில், இதற்கு மேலதிகமாக மேலும் ஒரு துறையை வழங்குமாறு கேட்டுள்ளார்.

எதிர்க்கட்சிக்கு செல்வதால், எந்த நன்மையும் இல்லை என்பதால், அப்படியான எண்ணம் இல்லை எனவும் சுசில் கூறியுள்ளார்.

பதவியை கேட்டு ஜனாதிபதியிடமோ, வேறு எவரிடமோ மண்டியிடப் போவதில்லை எனவும் முடிந்தால், தனக்கு மற்றுமொரு அமைச்சு பதவியை பெற்று தருமாறு சுசில், மகிந்த அமரவீரவிடம் கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.