மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கை! அமைச்சரவை மாற்றம் குறித்து நாமல் ஆதங்கம்

Report Print Murali Murali in அரசியல்
79Shares

நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றமானது மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சரவை மாற்றம் என்பது ஒரு முழுமையான கேலிக்கூத்தான விடயமாகும். இது மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கை. அத்துடன் சில அமைச்சர்களை திருப்பதி படுத்தும் முயற்சியாகும்.

இந்நிலையில், அமைச்சரவையை மாற்றுவதன் மூலம் எதனையும் மாற்ற முடியாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.