முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நாட்டுக்கு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிரதேசத்திற்கு மட்டும் உரியவராக இருந்து வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி கெட்டம்பே விகாரைக்கு இன்று விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தேவை முழு நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அல்ல எனவும் ஈழ கனவை நனவாக்குவது மாத்திரமே அவரது தேவையாக இருப்பதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர்களாக பதவி வகித்த தமிழ் தலைவர்கள் முழு நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுத்தனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.