தேர்தல் எல்லை நிர்ணயத்தில் வடகிழக்கில் பெருமளவு முஸ்லிம் பகுதிகள் பாதிப்பு

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்
141Shares

தொகுதி வாரியான எல்லை நிர்ணயத்தில் வடகிழக்கில் பெருமளவு முஸ்லிம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெருளமவு முஸ்லிம் பகுதிகள் அந்தந்த தொகுதிக்குள் இருந்து நீக்கப்பட்டு அடுத்த தொகுதிக்குள் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சம்மாந்துறை தொகுதியில் இருந்து வந்த நாவிதன்வெளி சிங்கள பிரதேசமான உஹனையுடன் இணைக்கபட்டுள்ளதாக அறிய வருகின்றது. இதன் மூலம் முஸ்லிம் பிரதி நிதித்துவம் குறையும் நிலை வந்துள்ளது.

இவைகள் மாகாண தேர்தலை இலக்கு வைத்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் அம்பாறை மாவட்டம் 14 உறுப்பினர்களை கொண்டது. இதில் 7 ஆசனம் வாக்களிப்பு மூலமாகவும் 7 ஆசனம் போனஸ் நியமனம் மூலமாக அமையும்.

இந்த விடயத்தில் ஹக்கீம் கட்சி எதையும் கண்டு கொள்வதில்லை. காரணம் ஹக்கீம் கட்சியில் மூளைப்பலம் உள்ள அல்லது அரசியல் அறிவு கொண்ட அல்லது அரசியல் தெரிந்த யாரும் அங்கு இல்லை.

உ+ம்- அரசியல் ஞானம் கொண்ட சேகு இஸ்ஸதீன் கல்முனை ஹமீட் போன்றோர் இல்லை. அங்கு வீட்டோடு மாப்பிள்ளை என்பது போன்று ஹக்கீம் கட்சியில் முள்ளுக்கும் இறைச்சிக்கும் அலைகின்ற கூட்டம் தான் உள்ளது.

அதேபோன்று அம்பாறைக்குள் புதிதாக புகுந்துள்ள மயில் கட்சி தலைவர் அமைச்சர் ரிசாத் கூட சில்லறை பசங்களை கொண்டு திரிகின்றார்.

ஆக மொத்தத்தில் கொஞ்சம் அரசியல் அறிவு கொண்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஒருத்தரும் முன்வரவில்லை.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அப்படி சமர்ப்பிக்கும் போது வேண்டிய திருத்தம் செய்யலாம் அதற்கான கால அவகாசம் உள்ளது. ஆனால் யார் செய்வது?

அம்பாறை திருகோணமலை மாவட்டத்தில் பாரிய வெட்டுக் குத்து செய்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்க செய்திருக்கலாம். முதலில் எல்லை நிர்ணய அறிக்கையை இந்த முஸ்லிம் அரசியல் மொத்த வியாபாரிகள் படிக்க வேண்டும்! பார்க்க வேண்டும்.

அதில் உள்ள குறை நிறைகளை பார்க்க வேண்டும் அதன் பின்னர் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று வருகின்ற எந்தவொரு அறிக்கையையும் இந்த மொத்த வியாபாரிகள் படித்த வரலாறு இல்லை எல்லாம். முடிந்து இறுதிக் கட்டத்தை அடைந்து மீண்டும் நாடாளுமன்றம் வருகின்ற போதுதான் ஹக்கீம் கட்சி கையை சுட்டுக் கொண்ட பல வரலாறு உள்ளது.

மகிந்த ஆட்சிக்காலத்தில் திவனகம இருந்து மாகாண சபை சட்டத்தை பிடுங்கும் சட்டமூலம் வரை ஹக்கீம் கட்சி மூக்குடைபட்ட பல கதைகள் உள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லா சரியாக செய்திருப்பார். ஆனால் அம்பாறை திருமலை மாவட்டம் தான் அதிக கவனம் செய்ய வேண்டியுள்ளது.

முதலில் இந்த மொத்த வியாபாரிகள் தங்கள் கட்சியின் முள்ளு துண்டுக்கு அலைகின்ற அத்தனை பேரையும் கூட்டி எல்லை நிர்ணயம் என்றால் என்ன அதன் சாதக பாதம் என்ன? கட்சிக்கு என்ன பாதிப்பு? கட்சிக்கு ஆசனம் இழப்பு பற்றி ஆராய வேண்டும் அதன் பின்னர் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும். எதுமே தெரியாமல் எல்லை நிர்ணயம் பற்றி பேச இவங்களுக்கு என்னதகுதி உள்ளது.

மாகாணத் தேர்தலை நடாத்துமாறு அரசுக்கு தேர்தல் ஆணையம் அழுத்தம்

பின்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை இவ்வருட செப்டம்பர் மாதத்திக்கு முன்பு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு நடாத்த வேண்டும் என்று அவகாசமும் ஆணையம் கொடுத்துள்ளது.

ஆனால் புதிய கலப்பு தேர்தல் மூலம் செம அடி வாங்கிய ரணில் இந்த தேர்தலை இன்னும் கொஞ்சம் பிந்தப் போட்டால் UNP க்கு ஏதும் நன்மை நலவு இருக்குமா என்று UNP உயர் குழுவிடம் கேட்டுள்ளாராம்.

மறுபுறம் இந்தக் கலப்பு தேர்தலை முற்றாக ஒளித்து நீக்கி விட்டு பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவம் கொண்ட அதாவது தொகுதி வாரியான விகிதாசார முறைமை கொண்ட தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் யாப்பில் 20 ஆவது திருத்தும் கொண்டு வரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டாராம்.

ஆக இந்தக் கலப்பு திருமணம் பற்றி ஒருத்தராவது ஒரு நாளாவது கூடிக் கும்மாளம் அடிக்காமல்தான் இந்த கோமாளி தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

இப்போது எல்லை நிர்ணயம் இன்னும் முற்றுபெறவில்லை அதில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது அதனால் தேர்தல் இன்னும் பிற்போட வேண்டும் என்று பிரதமர் ரணில் விரும்புகின்றார்.