துறைமுக அதிகார சபை கடந்த 2017 ஆம் ஆண்டு 13.2 பில்லியன் ரூபா இலாபத்தை சம்பாதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
துறைமு அதிகார சபையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக எடுத்த உடனடி செயற்பாடுகள் காரணமாக இந்த இலாபம் கிடைத்துள்ளதாக துறைமுக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபையின் கூட்டு உடன்படிக்கை தொடர்பில் திறைசேரியின் அனுமதியை பெற்று சகல ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவும், அதனை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செலுத்தவும் அனுமதியை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.