இரண்டு வாரத்துக்குள் இன்னுமோர் அமைச்சரவை மாற்றம்?

Report Print Aasim in அரசியல்
95Shares

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தொடர்பான அமைச்சரவை மாற்றமொன்று இன்னும் இரண்டு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மத்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பிலும் புதியவர்கள் சிலர் அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிய வருகின்றது.

டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், ஹிஸ்புல்லாஹ் போன்றோர் அமைச்சர்களாகவும் காதர் மஸ்தான், எம்.எஸ். தௌபீக், உள்ளிட்ட இன்னும் சிலர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.