இலங்கைக்கான இந்திய துணை தூதுவரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் குறித்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணை தூதுவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாண முதலமைச்சரினால் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.