நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
கண்டி - ராஜோபவனாராம விகாரைக்கு மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் இருக்கும் அமைச்சர்களுக்கே அவர்களின் துறைகள் மாற்றிக் கையளிக்கப்பட்டுள்ளது.
இருந்தவர்களே மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலின் மூலம் பொதுமக்கள் வழங்கிய ஆணையை அரசாங்கம் தடுத்துக் கொண்டிருக்கின்றது.
எனினும், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.