அரசின் மீது கடும் அதிருப்தியில் அதுரலியே ரத்ன தேரர்!

Report Print Aasim in அரசியல்
178Shares

அதுரலியே ரத்ன தேரர் அரசாங்கம் தொடர்பில் தீவிர அதிருப்தி கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

தனது அதிருப்தி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ​நேருக்கு நேர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

நஞ்சுப் பதார்த்தங்களற்ற உணவுற்பத்தி என்ற இலக்கை நோக்கிய செயற்பாடுகளில் ரத்ன தேரர் ஈடுபட்டுள்ள நிலையில்., அரசாங்கம் கிளைபோசேட் பசளை மீதான தடையைத் தளர்த்தியுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் சிறுநீரகப் பாதிப்புக்குக் காரணமாக கிளைபோசேட் பசளை வகைகளுக்குத் தடைவிதிப்பதாக வாக்களித்து பதவிக்கு வந்த அரசாங்கம் தற்போது அதற்கு எதிர்மாறாக நடக்கத் தலைப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் அரசாங்கம் முகாமைத்துவம் செய்து சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான விடயங்கள் அதுரலியே ரத்ன தேரரை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.

அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை பலதடவைகள் பகிரங்கமாக வௌிப்படுத்தி உள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பினை அடுத்து தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.