அஜித் பீ பெரேராவுக்கு நாளை மற்றுமோர் அமைச்சுப் பதவி

Report Print Aasim in அரசியல்
105Shares

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அஜித் பீ பெரேராவுக்கு நாளை மற்றுமோர் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் முன்னர் வகித்த மின்வலு மற்றும் புத்தாக்க சக்தி பிரதியமைச்சர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

மின்வலு மற்றும் புத்தாக்க சக்தி பிரதியமைச்சுப் பதவியும் அஜித் பீ பெரேராவுக்கே வழங்கப்பட இருந்ததாகவும் எனினும் அவரது சத்தியப்பிரமாணத்தின் போது குறித்த விடயம் தவறுதலாக விடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக அவர் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் மின்வலு மற்றும் புத்தாக்க சக்தி பிரதியமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.