செல்வாக்கு இழந்தார் மைத்திரி! எதையும் செய்ய முடியாது

Report Print Aasim in அரசியல்
183Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெறும் பதவி இலச்சினை முத்திரைபோன்று செல்வாக்கிழந்து போயுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கிண்டலடித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலமாக மைத்திரி தரப்பையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் பொதுமக்கள் முற்றாக நிராகரித்துள்ளதை தௌிவாக உணர்த்தியுள்ளனர்.

பொதுச் சொத்துக்களை விற்று வருமானமீட்டும் அரசாங்கத்தின் கொள்கைக்கு பொதுமக்கள் மரணஅடி கொடுத்துள்ளனர்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்தின் ஒரு அங்கமே தவிர வேறில்லை. அவர் கடந்த மூன்று வரவு செலவுத்திட்டங்களிலும் எதுவித எதிர்ப்புமின்றி அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

அதே போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின் காரணமாகவே இன்று அந்தப் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்.

எனவே அவர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார். அந்த வகையில் அவர் வெறும் பதவி இலச்சினை முத்திரை போன்று எதற்கும் அதிகாரமற்ற ஜனாதிபதியாகவே செயற்பட வேண்டியிருக்கும்.

இந்த நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

ஆனால் பலவீனமான சபாநாயகர் கரு ஜயசூரிய அதற்கு இடமளிக்கமாட்டார். அவரும் தனது தலைவரின் சொற்படி நடப்பாரே தவிர ஜனநாயக விழுமியங்களை மதிக்கமாட்டார் என்றும் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.