ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் விமல்! அச்சுறுத்தலாக இருக்கும் பசில்?

Report Print Aasim in அரசியல்
98Shares

கூட்டு எதிர்க்கட்சியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு விமல் வீரவங்ச எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பசில் ராஜபக்‌ஷ அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரை கூட்டு எதிர்க்கட்சியினுள் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்க கடுமையான ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் கொள்கை முடிவுகள் தொடர்பிலும் யாரையும் கலந்தாலோசிக்காது அவர் தனது கருத்தை ஊடகங்களிடம் வௌியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

எனினும் தற்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவில் பசில் ராஜபக்‌ஷவின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது விமலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது.

இந்நிலையில் இருவரும் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.