உள்ளூராட்சி சபைகளில் ஏற்கனவே பதவிகளை வகித்தவர்களுக்கு தலைவர், பிரதித் தலைவர் பதவிகளில் முன்னுரிமை அளிப்பதாக பொதுஜன பெரமுண கட்சி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சி 239 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் குறித்த சபைகளில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் தற்போது உத்தேச சபைகளுக்கான தலைவர், பிரதித் தலைவர் பதவிகளுக்கான தேர்வில் பொதுஜன பெரமுண கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஏற்கனவே உள்ளூராட்சி சபைகளில் தலைவர் , பிரதித் தலைவர் பதவிகளையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளையோ வகித்தவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் பதவிப் பொறுப்புகளை வழங்க பொதுஜன பெரமுண கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் வட்டார அடிப்படையில் கூடுதலான வாக்குவீதங்களைப் பெற்றவர்களுக்கே பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுண சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.