அம்பாறைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்

Report Print Aasim in அரசியல்
138Shares

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அம்பாறைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீர்வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் பிரதமரின் அம்பாறை விஜயம் நடைபெறவுள்ளது.

நேற்று மாலை நான்கு மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அம்பாறை இனக்கலவரம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீமுடன் இரண்டாவது தடவையாக கலந்துரையாடியிருந்தார்.

அம்பாறையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நேரில் வருகை தருவதுடன், சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொடர்பில் கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட ​வேண்டும் என்றும் ​ நேற்றைய சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம் ​பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் பிரதமர் ரணில் அம்பாறை நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடுவது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.