ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை! த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு?

Report Print Kamel Kamel in அரசியல்
171Shares

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை இந்த வாரம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஐ.தே.கவின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஆளும் கட்சியினதும், எதிர்க்கட்சியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கான கையொப்பங்கள் திரட்டப்படும்.

இந்த வாரம் நாடாளுமன்றம் கூடுவதனால் இலகுவில் கையொப்பங்களை திரட்டிக்கொள்ள முடியும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், ஜே.வி.பியின் உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர்.

போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டதன் பின்னர் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும்.

நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்றின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் கட்சித் தலைவர் கூட்டத்தில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதம் செய்யப்பட உள்ளது.

இதேவேளை, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைமை பதவி வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்னும் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.