கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவர் இலங்கையை வந்தடைந்தார்

Report Print Ajith Ajith in அரசியல்
22Shares

ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான இளவரசர் மிரெட் அல் ஹுஸைன், இன்று இலங்கையை வந்தடைந்தார்.

எதிர்வரும் 7ஆந் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருக்க உள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது, விஷேட தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இணைந்து வட மாகாணத்திற்கான கள விஜயமொன்றை மேற்கொள்வதற்கும் அவர் மேலும் திட்டமிட்டுள்ளார்.

இந்த விஜயத்திபோது அங்கே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முதலாவதாக கண்டறியவுள்ளதுடன், கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் முகவர்களையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.