ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் கருத்தறிவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஹரீன் பெர்ணாந்து, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தக் குழுவை கடந்த வாரம் நியமித்திருந்தார்.
பிரதமரை மாற்ற வேண்டும் என்ற கருத்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. பிரதமரை மாற்றவேண்டும் என்ற கோஷம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் அளவுக்கு மாறியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நியமித்த குழுவின் அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிக்கப்படவிருக்கிறது.