பாடசாலை வளவில் சிகரெட் விற்பனை செய்ய தடை!

Report Print Nivetha in அரசியல்
40Shares

பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், 18 வயதிற்கு உட்பட்டோர் சிகரெட் விற்பனையில் ஈடுபடுவதற்கான தடை உத்தரவை பெறுவதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.