இந்தியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான செயலாளர் ருச்சிகன் ஷாம், விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதியை வரவேற்றார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரங்ஜித் சிங் மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டவர்கள் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.